பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பான் பிரதமர் மீது பைப் குண்டு வீச்சு! அதிர்ச்சியூட்டும் வீடியோ
பொது கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மீது பைப் குண்டு வீசியதையடுத்து அந்நாட்டு மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.
பைப் குண்டு வீச்சு
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா(Fumio Kishida) பொதுக் கூட்டத்தில் கலந்து மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, குண்டு வெடித்ததையடுத்து அந்நாட்டு மக்களிடையே பதற்றம் நிலவியுள்ளது.
@Kyodo
ஜப்பான் நாட்டில் வகாயாமா நகரில் அந்நாட்டுப் பிரதமர் புமியோ கிஷிடா மக்கள் மத்தியில் தனது பேச்சை தொடங்குவதற்கு சற்று முன், திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
@reuters
இதனை அடுத்து, பிரதமர் புமியோ கிஷிடா அந்த இடத்திலிருந்து பத்திரமாக பாதுகாவலர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டார்.
குற்றவாளி கைது
ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளருடன் அக்கட்சித் தலைவரும், பிரதமருமான புமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டின் செய்தி குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, 65 வயதான பிரதமர் புமியோ கிஷிடா பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார், மேலும் அவர் காயமின்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Smoke bomb thrown at PM Kishida in Japan pic.twitter.com/dCnGGYh3Z2
— Crime Watch Juarez (@CrimeWatchJRZ) April 15, 2023
இதற்கிடையில், பைப் வெடிகுண்டை வீசிய குற்றவாளியை பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
திடீரென ஏற்பட்ட இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
Update
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) April 15, 2023
Person apprehended, Japan PM Fumio Kishida safe after blast at speech — Japanese media
(Video via social media) https://t.co/7QM32JZT9Y pic.twitter.com/8DZlcYGtaB
சுமார் 9 மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே(shinzo abe), மேற்கு ஜப்பானில் உள்ள நாராவில் பிரச்சார உரையின் போது பின்னால் இருந்து மர்ம நபரால் சுடப்பட்டார்.
அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
துப்பாக்கி பயன்படுத்த மிகுந்த கட்டுப்பாடு இருக்கும் உலகின் பாதுகாப்பான நாடுகளில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.