ஜப்பான் டோகரா தீவுகளில் இருவாரங்களில் 900 நிலநடுக்கங்கள்: அச்சத்தில் மக்கள்
ஜப்பானின் தெற்குப் பகுதியிலுள்ள டோகரா தீவுகளுக்கு அருகே கடந்த இரு வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி, ஜூன் 21 முதல் நில அதிர்வுகள் தொடங்கியுள்ளன.

F-35B விமானத்தை மற்றொரு விமானத்தில் ஏற்றிச்செல்ல முடிவு., அனைத்து கட்டணங்களையும் செலுத்தும் பிரித்தானியா
ஜூன் 30 வரையிலான நிலவரப்படி, ஒரே நாளில் அதிகபட்சமாக 183 நிலநடுக்கங்கள் ஜூன் 23 அன்று பதிவாகியுள்ளன.
தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக காணப்படுகின்றது. ஜூன் 29 அன்று 98 அதிர்வுகள் மற்றும் ஜூன் 30 அன்று 62 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
டோகரா தீவுச்சாரம், கியூஷூ தீவுக்கு தெற்கே அமைந்துள்ளதுடன், அதன் கடலடியில் பெரும் அழுத்தம் உருவாகும் இயற்கை அமைப்பின் காரணமாக இது போன்ற அதிர்வுகள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, இந்தத் தீவுகளில் ஏழு தீவுகள் மட்டுமே மக்கள் வாழும் பகுதிகள். மொத்தமாக சுமார் 700 மக்கள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். மக்கள் தூங்க முடியாமல் அதிக அச்சத்துடன் இருப்பதாக டோகரா ஊராட்சி இணையதளம் தெரிவிக்கின்றது.
“எப்போதும் நிலம் குலுங்கும் உணர்வு. தூங்கவே பயமாக உள்ளது” எனக் கூறியிருக்கிறார் ஒரு குடியிருப்பாளர்.
ஜப்பான் உலகில் மிக அதிக நிலநடுக்கங்களை சந்திக்கும் நாடாக உள்ளது. ஆண்டுக்கு 1,500க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் உலக நிலநடுக்கங்களில் 18 சதவீதம் ஜப்பானில்தான் நிகழ்கின்றன.
நிபுணர்கள் எச்சரிக்கை
அடுத்த 30 ஆண்டுகளில் நன்காய் பள்ளத்தாக்கு பகுதியில் 75 முதல் 82 சதவீத சாத்தியத்துடன் மிகப்பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, அரசு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |