மலிங்காவின் அரிய சாதனையில் பும்ரா! மொத்தம் ஐவர் மட்டுமே
டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
ஜஸ்பிரித் பும்ரா
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 100வது விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வித கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5வது பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்தப் பட்டியலில் லசித் மலிங்கா, டிம் சௌதீ, ஷாகிப் அல் ஹசன், ஷாஹீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் உள்ளனர்.
ஐந்து வீரர்கள்
இலங்கையின் லசித் மலிங்கா(Lasith Malinga) ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுகளும், டெஸ்ட்களில் 101 விக்கெட்டுகளும், டி20யில் 107 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். 
நியூசிலாந்தின் டிம் சௌதீ (Tim Southee) 391 டெஸ்ட், 221 ஒருநாள் மற்றும் 164 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) 246 டெஸ்ட், 317 ஒருநாள் மற்றும் 149 டி20 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தானின் ஷாஹீன் ஷா அஃப்ரிடி (Shaheen Shah Afridi) 121 டெஸ்ட், 135 ஒருநாள் மற்றும் 126 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) 234 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 101 டி20 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் 100 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் பும்ரா ஆவார். அவருக்கு முன்பே அர்ஷ்தீப் சிங் 100 விக்கெட்டுகள் இலக்கை எட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |