Instant idli: ஒரு கப் ஜவ்வரிசி இருந்தால் போதும்.., பஞ்சிபோல இட்லி செய்யலாம்
பொதுவாகவே தென்னிந்தியர்களின் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி மற்றும் தோசை தான் உணவாக இருக்கும்.
இட்லி, தோசையை செய்வது சுலபம் தான், ஆனால் அதற்கு மாவு தயார் செய்வது தான் கடினமானதாகும்.
அந்தவகையில், ஒரு கப் ஜவ்வரிசி வைத்து 10 நிமிடத்தில் பூப்போல இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஜவ்வரசி- 1 கப்
- ரவை- 1 கப்
- தயிர்- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ¼ ஸ்பூன்
- உளுந்து- ¼ ஸ்பூன்
- கடலை பருப்பு- ¼ ஸ்பூன்
- சீரகம்- ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
- பச்சை மிளகாய்- 1
- பெரிய வெங்காயம்- 1
- மிளகு- 1 ஸ்பூன்
- கேரட் துருவியது- 1 கப்
- தேங்காய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி சேர்த்து ஒரு இரவு முழுக்க ஊறவைக்கவும்.
அடுத்து ஊறிய ஜவ்வரிசியில் ரவை, தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும்.
இதனையடுத்து கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், மிளகு சேர்த்து நன்றாக வதக்கி கலந்து வைத்த மாவில் சேர்க்க வேண்டும்.
பின் துருவிய கேரட் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து மாவை கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
இறுதியாக மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ஜவ்வரிசி இட்லி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |