ஜெய ஏகாதசி: இந்நாளில் இப்படி செய்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம்!
மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் விஷேடமானதாகும்.
விரதங்களில் மிகவும் கடுமையானதும், புனிதமானதுமாக கருதப்படும் விரதமாக ஏகாதசி விரதம் இருக்கிறது.
12 அல்லது 24 ஏகாதசி விரதத்தை தொடர்ந்து இருந்தால் அனைத்து கர்மவினைகள், பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திதிகளில் 11வது திதியாக வரும் ஏகாதசி மகாவிஷ்ணுவிற்கு உரியதாகும்.
வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும். ஒவ்வொரு ஆண்டும் வரும் 24 ஏகாதசிக்கும் ஒவ்வொரு தின சிறப்புகள் இருக்கிறது.
அவ்வாறு மாசி மாதத்தில் வரும் ஏகாதசிக்கு ஜெய ஏகாதசி என்று பெயர். இந்த ஆண்டுக்கான ஜெய ஏகாதசி விரதமானது பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதியில் வருகிறது.
ஜெய ஏகாதசி 2024 திகதி, நேரம்
- பெப்ரவரி 19ம் திகதி பகல் 12.56 மணி ஆரம்பமாகி, பெப்ரவரி 20ம் திகதி பகல் 01.11 வரை ஏகாதசி திதி இருக்கும்.
- இதனால் பெப்ரவரி 20ம் திகதி ஜெய ஏகாதசி விரதத்தை கடைபிடித்து, அன்றை நாள் முழுவதும் உபவாசமாக இருக்க வேண்டும்.
- பின் 21 ஆம் திகதியன்று காலை சூரியன் உதித்த பிறகு 06.55 மணி முதல் 09.11 மணிக்குள் பாரனை செய்து விரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கடைப்பிடிப்பது எப்படி?
- அதிகாலையில் எழுந்து நீராடி, மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
-
மகாவிஷ்ணு சிலை வைத்திருப்பவர்கள் பஞ்சாமிர்தம் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
- நெய் விளக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி பூஜை செய்யவும்.
-
பெருமாளுக்கு சிறிதளவாவது துளசி படைத்து வழிபட வேண்டும்.
-
விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது.
- ஏகாதசியன்று எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
ஜெய ஏகாதசி விரத பலன்கள்
-
ஜெய ஏகாதசி அன்று விரத்தை இருப்பவர்கள் கடந்த காலங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
-
நல்ல குடும்பம், ஆரோக்கியம், அதிர்ஷ்டம், வெற்றி, செல்வ வளம் கிடைக்கும்.
- இந்த நாளில் மகாவிஷ்ணுவின் பத்தினியான மகாலட்சுமியை வணங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |