கோலாகலமாக நடந்து முடிந்த விஜயகுமார் பேத்தியின் திருமணம் - தங்கத்தில் ஜொலிக்கும் தியா!

Kirthiga
in பொழுதுபோக்குReport this article
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளான தியாவின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
விஜயகுமார் பேத்தி திருமணம்
நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கண்ணிற்கு மகளான இவர்களுக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அதில் இரண்டாவது மகளான அனிதா விஜயக்குமார் ஒரு மருத்துவர். இவர் கொகுல் என்பரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
விஜயகுமார் குடும்பத்தில் சினிமாவில் முகம் காட்டாதவர் அனிதா தான். இவருக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் கோகுல் என்கிற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் தியாவின் திருமணம் குறித்து ஒரு சில வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி தற்போது பேச்சு பொருளாகியுள்ளது.
சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் இத்திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமண விழாவில் பல பிரபலங்களும் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும் நடிகர் ரஜினி காந்த் கலந்துக்கொண்டுள்ளார்.
விஜயகுமார் பேத்தியான தியாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |