ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவிடாமல் தடுத்த சசிகலா! மரண நேரம் தாமதமாக அறிவிப்பு.. அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன
அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் பரிந்துரைத்தபடியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க விடாமல் சசிகலா தடுத்ததாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில், ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 2016 டிசம்பர் 5ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் 4ஆம் திகதியே இறந்தார் என குறிப்பிட்டுள்ளதால், அவரது மரணம் குறித்து அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.