ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்யறீங்க! மூச்சுத்திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஓடியோ
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து பேசும் ஒடியோ மீண்டும் வெளியாகி கேட்போர் மனதை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஜெயலலிதா பேசிய ஒடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பலத்த மூச்சுத்திணறலுடன் மருத்துவருடன் 42 வினாடிகள் அந்த ஒடியோவில் பேசியிருக்கிறார்.
*"அய்யோ.. அம்மா.. நெஞ்சுல விசில் சத்தம் கேட்குது.."*
— எம். சின்னத்தம்பி (@cinnattampi) October 20, 2022
"நீங்களும் சரியில்லை டாக்டர்... என்றால் என்ன அர்த்தம்?
அப்போ கூட இருக்கிறவங்களும் சரியில்லை என்று அன்றே உணர்ந்து இருக்கிறார் ஜெயலலிதா
- சிகிச்சையின் போது பேசிய ஆடியோ pic.twitter.com/cFVosECLqJ
மருத்துவரிடம் ஜெயலலிதா ‘’oh sad.. எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க?”’ என்று கேட்க, அதற்கு அந்த மருத்துவர், ‘’vlc ரெக்கார்டு’’ என பதிலளிக்கிறார். இதனையடுத்து, ‘’இப்போ நான் சொல்றது கேக்குதா? அப்போ கூப்பிட்டேன்.. அப்போ எடுக்க முடியலனு சொன்னீங்க.
எல்லாம் ஒண்னு கிடக்க ஒண்ணு நீங்களும் செய்றீங்க. எடுக்க முடியலான விடுங்க’’ என ஜெயலலிதா அந்த ஒடியோவில் கூறுகிறார். இந்த ஒடியோ அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பீர குரலோடு சிங்கம் போல கர்ஜித்த பெண்மணியின் கடைசி நாட்கள் இவ்வளவு மோசமாக இருந்திருக்கிறதே என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.