கலங்கிய எதிரணியினரை அணைத்து ஆறுதல்: உலகக்கிண்ணத்துடன் இதயங்களையும் வென்ற ஜெமீமா, ராதா
இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்ததால் வருத்தத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியினரை ஆறுதல்படுத்தியது விடயம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்த இந்திய வீராங்கனைகள்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதல் ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது. 
இந்திய வீராங்கனைகள் கிண்ணத்தை வென்றவுடன் கொண்டாட்டத்தை தொடங்கவில்லை. மாறாக, எதிரணியான தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை ஆறுதல்படுத்த கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்தனர்.
தங்கள் முதல் உலகக்கிண்ண கனவு நொறுங்கியதால் கண்ணீரை அடக்க முயன்றவர்களை, இந்திய வீராங்கனைகள் ஸ்ம்ரிதி மந்தனா, ஜெமீமா உள்ளிட்டோர் ஆறுதல்படுத்த நடந்து கொண்டனர்.
குறிப்பாக ராதா யாதவும், ஜெமீமா ரோட்ரிகஸும் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை கட்டியணைத்து ஆறுதல்படுத்தினர்.
இதயங்களை வென்ற வீராங்கனைகள்
இந்த செயல் மூலம் இந்திய வீராங்கனைகள் பலரது இதயங்களை வென்றனர். ஐசிசி பகிர்ந்து கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களில் போட்டியின் முடிவில் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் காட்டப்பட்டுள்ளன.
இவற்றை உலகமெங்கும் உள்ள ரசிகர்களும், நிபுணர்களும் பாராட்டி வருவதுடன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதற்கிடையில், தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் போட்டிக்கு பின் பேசியபோது,
"எங்கள் அணியை வழிநடத்தியதற்காக இந்த அணியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் முழுவதும் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினோம்.
ஆனால் இன்று (நேற்று) இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம். தோல்வியடைந்த அணியில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இதிலிருந்து நாங்கள் நிச்சயமாக வளர்ச்சியடைவோம்" என்றார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |