வெனிசுலாவில் அமெரிக்க போர் விமானத்துடன் நேருக்கு நேர் மோதவிருந்த பயணிகள் விமானம்
சிறிய கரீபியன் நாடான குராக்கோவின் JetBlue பயணிகள் விமானம் ஒன்று, விமானியின் சமயோசித முடிவால் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.
நேருக்கு நேர் மோதும்
குறித்த JetBlue விமானத்தின் பாதையில் திடீரென்று அமெரிக்க போர் விமானங்களுக்கான எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று குறுக்கிடவே, JetBlue பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதும் மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டது.

ஆனால் சுதாரித்துக் கொண்ட JetBlue விமானி, துரிதமாக செயல்பட்டு பாதையை மாற்றியுள்ளார். அமெரிக்க இராணுவ விமானம் தங்களின் பாதையில் குறுக்கிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான அவரது உரையாடலில், நடு வானில் மிக மோசமான விபத்து ஏற்பட்டிருக்கும் என அந்த விமானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவ விமானம் எங்கள் விமானப் பாதையில் நேரடியாகக் குறுக்கிட்டு சென்றது... அதன் டிரான்ஸ்பாண்டர் இயக்கப்படவில்லை, இது மூர்க்கத்தனமான சம்பவம் என அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் வெனிசுலா கடற்பகுதியிலிருந்து சற்று தொலைவில் நடந்துள்ளது. குராக்கோவிலிருந்து நியூயார்க் நகரத்தின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் நேர்ந்துள்ளது.
போக்குவரத்து குறுக்கீடு
கரீபியனில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது அமெரிக்க இராணுவம் கொடிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், வெனிசுலா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கவும் முயன்று வரும் நிலையிலேயே JetBlue பயணிகள் விமானம் ஒன்று பெரும் அசம்பாவிதத்தில் இருந்து தப்பியுள்ளது.

எங்களுக்கு 5 மைல்களுக்குள் - ஒருவேளை 2 அல்லது 3 மைல்களுக்குள் - எங்களுக்கு நேராக போக்குவரத்து குறுக்கீடு நடந்துள்ளது என விமானி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் JetBlue நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் Derek Dombrowski தெரிவிக்கையில், இந்த சம்பவம் குறித்து நாங்கள் ஃபெடரல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம், எந்தவொரு விசாரணையிலும் பங்கேற்போம் என்றார்.
முன்னதாக வெனிசுலா வான்வெளியில் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க விமானங்களுக்கு ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |