வழிப்பறி கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட நடிகை..உறவினர்கள் முன்னிலையில் உடல் தகனம்
கவுகாத்தியில் கொலை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் நடிகை ரியா குமரியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகை சுட்டுக்கொலை
கோர்த்த மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் ரியா குமாரி(30). இவர் கடந்த 28ஆம் திகதி கணவர் மற்றும் மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது வழிப்பறி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கவுகாத்தியின் பக்னன் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்தது. அதன் பின்னர், ரியா குமாரியின் உறவினர்கள் அளித்த புகாரின் பெயரில் கணவர் பிரகாஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
உடல் தகனம்
முன்னதாக, தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று அடையாளம் காட்டிக்கொண்ட பிரகாஷ் குமார், மூன்று பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கி விட்டு பொருட்களை கொள்ளையடிக்க முயன்றதாகவும், அப்போது அவரது மனைவி விரைந்து சென்றபோது அந்த கும்பல் அவரை சுட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரியா குமாரியின் உடல் அவரது சொந்த மாநிலத்தில் உறவினர்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.