இளம் பெண்ணின் தலையை தேடும் பொலிஸ்., இரண்டாவது மனைவியை கொன்ற கணவன் கைது
இரண்டாவது மனைவியை கொன்று, பல துண்டுகளாக வெட்டி கொலையை மறைக்க முயன்ற நபர் பொலிஸாரால் கையது செய்யப்பட்டார்.
12 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட பழங்குடியின பெண்ணின் உடல்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், சனிக்கிழமை (டிசம்பர் 17) மாலை 6 மணியளவில், சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீடொன்றில் 22 வயது பழங்குடியின பெண்ணின் உடல் 12 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவம் போல இந்த கொலையும் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தில்தார் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
aajtak
பொலிஸாரின் கூற்றுப்படி, உடலின் சில பாகங்கள் இன்னும் காணவில்லை. மீதமுள்ள உடல் உறுப்புகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக மேலும் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை அழைத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
காணவில்லை என பொலிஸில் புகார்
பாதிக்கப்பட்ட ரூபிகா பஹாடின், அவரது கணவர் தில்தார் அன்சாரியால் கொலை செய்யப்பட்டார். ரூபிகா தில்தாரின் இரண்டாவது மனைவி என்றும், இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் குடும்பத்தினர் காணாமல் போன புகாரை பதிவு செய்ய காவல்துறையை அணுகியபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, விசாரணையில், ரூபிகாவின் சிதைந்த உடலை போலீசார் மீட்டனர்.
துண்டு துண்டாக..
மின்சாரம் கட்டர் போன்ற கூர்மையான பொருளைப் பயன்படுத்தி பெண்ணின் உடலை பல துண்டுகளாக வெட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.