இனி ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் பார்க்க முடியாதா? - புதிய ஒளிபரப்பாளரை தேடும் ஐசிசி
ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தில் இருந்து ஜியோ ஹாட்ஸ்டார் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட்
ஜியோ ஹாட்ஸ்டார் என்பது திரைப்படங்கள், தொடர்கள் கிரிக்கெட் நிறுவனங்களை பார்க்கும் ஸ்ட்ரீமிங் தளமாகும்.

இது 17 மொழிகளில் செயல்பட்டு வருகிறது. இது அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு சொந்தமானதாகும்.
2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் ஐசிசி நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை 3 பில்லியன் டொலருக்கு ஜியோ ஹாட்ஸ்டார் வாங்கி இருந்தது.
டி20 உலகக் கோப்பை 2024 (ஏற்கனவே நடந்தது), சாம்பியன்ஸ் டிராபி 2025 உட்பட பல முக்கிய தொடர்கள் இதில் ஒளிபரப்பப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பையும் இந்த ஒப்பந்ததில் அடங்கி இருந்தது.
ஒப்பந்தத்தில் இருந்து விலகல்
இந்நிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாகவே ஜியோ ஹாட்ஸ்டார் ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான நிதி இழப்பு காரணமாக ஜியோ ஹாட்ஸ்டார் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு நிதி ஆண்டில், ரூ.12,319 கோடியிலிருந்து ரூ.25,760 கோடி இழப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக 2026 - 2029 சுழற்சிக்கு இந்தியாவில் ஊடக உரிமைகளின் விற்பனையை மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் 2.4 பில்லியன் டொலர்களை ஐசிசி எதிர்பார்க்கிறது.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI), நெட்ஃபிக்ஸ் , அமேசான் பிரைம் வீடியோ ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனம் ஒப்பந்தத்திற்கு முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை, ஒப்பந்தத்தின் அதிக விலை காரணமாக எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |