தமிழக மக்களின் கவனத்திற்கு.. 4 பேருக்கு JN.1 புதிய வகை கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் 4 பேருக்கு JN.1 புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
JN.1 என்ற வகை கொரோனா
இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக JN.1 என்ற வகை கொரோனா திரிபு பரவி வருகிறது.பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கிய நிலையில் கொரோனா தொற்று மட்டுமல்லாமல் பிற நோய் தொற்றுக்கும் இந்த JN.1 என்ற வகை கொரோனா திரிபு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது, விடுமுறைக்காலம் என்பதால் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் கூடுவதால் சுவாச தொற்று நோய்கள் ஏற்படுகின்றது. இதற்கிடையே, கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையை கடைபிடிக்குமாறு பல்வேறு நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு
இந்நிலையில், நேற்று இந்தியாவில் 64 பேருக்கு JN.1 என்ற வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில், கோவாவில் 34 பேருக்கும், மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழகத்தில் 4 பேருக்கும் JN.1 என்ற வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உள்ள மூதாட்டிக்கு இந்த கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |