நியூயார்க் ஏலத்தில் விலைப்போன அரியக்கோசர் எலும்புக்கூடு: $47.3 மில்லியனுக்கு ஏலம்
Jodi dinosaur fossil Fetches $47.3 Million at Sotheby’s Auction: ஜோடி என்ற புனைப்பெயர் கொண்ட அரிய டைனோசர் எலும்புக்கூடு சுமார் $47.3 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
47.3 மில்லியன் டொலருக்கு விலை போன டைனோசர் எலும்புக்கூடு
நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற சோத்பிஸ் ஏல நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஏலத்தில் அரிதான டைனோசர் புதைப்படிவம் ஒன்று சுமார் $47.3 மில்லியன் டொலருக்கு(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.390+ கோடி) விலை போகியுள்ளது.
10 அடி உயரம் கொண்ட இந்த டைனோசர் எலும்புக்கூடு ஜோடி(Jodi) என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படுகிறது. மேலும் இது பிற்கால கிரெடேசியஸ் (Late Cretaceous) காலத்தை சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.
சுமார் $9 மில்லியன் டொலருக்கு தொடங்கிய இந்த ஏலம், 6 போட்டியாளர்கள் இடையே நீடித்த 12 நிமிட விறுவிறுப்பான போட்டியின் இறுதியில் $47.3 மில்லியன் டொலருக்கு வாங்கப்பட்டது.

இதன் மூலம் ஏல வரலாற்றில் இரண்டாவது அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட டைனோசர் புதை படிவம் என்ற ஜோடி டைனோசர் பெற்றுள்ளது.
டைனோசர் வகையில் ஏற்பட்ட முக்கிய திருப்புமுனை
ஜோடி டைனோசர் சிறுவயது டைரனோசரஸ் ரெக்ஸ் (T. rex) என கருத்தப்பட்டு வந்த நிலையில், இது மாறாக நானோடைரனஸ் (Nanotyrannus) என்ற தனித்துவமான டைனோசர் இனத்தை சேர்ந்தது என கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேர்த்தியான மண்டை ஓடு, சிதையாத 191 எலும்புத் துண்டுகளுடன் இருக்கும் இந்த டைனோசர் புதை படிவம் காட்சிப்படுத்த முழு தகுதி உடையது என ஏல நிறுவனமான சோத்பிஸ் தெரிவித்துள்ளது.