தன்னை கொலைகாரன் என்று கூறிய ஜோ பைடனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அளித்த சூசகமான பதில்
ரஷ்ய ஜனாதிபதி கொலைகாரன் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புடின் சூசகமாக பதிலளித்துள்ளார்.
ஏபிசி நியூஸ் நேர்காணலில், ரஷ்ய ஜனாதிபதி ஒரு கொலையாளி என்று நம்புகிறீர்களா என்று கேட்டபோது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நானும் அதை ஏற்கிறேன் என கூறினார்.
மேலும் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீட்டிற்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தார். அதேசமயம், 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனிடையே, புடினை கொலைகாரன் என்று தான் நினைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதையடுத்து, அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், மன்னிப்பு கூறாவிட்டால் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி கொடுக்கக்கூடும் என்று ரஷ்ய மூத்த எம்.பி தெரிவித்தார்.
2020 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு செய்ததாக ஜோ பைடனின் சர்ச்சைக்குரிய அறிக்கை குறித்த கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின், பைடனின் அறிக்கையைப் பொறுத்தவரை, அவர் சொன்னது போல் நாங்கள் தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர்கள்.
நான் அவருக்கு என்ன பதிலளிப்பேன்? உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருங்கள்! அவருக்கு நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறினார்
இதை அவர் நகைச்சுவையாகவோ அல்லது முரண்பாடாகவோ கூறவில்லை என்பதை வலியுறுத்தினார்.