அதிரடி சதத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனைகளை படைத்த ஜோ ரூட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஜோ ரூட் சாதனைகள்
இந்த தொடரில் இது ஜோ ரூட்டின் 3வது சதமாகும். இதன் மூலம் ஜோ ரூட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 6000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில், 4278 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்தில் உள்ளார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 39 சதங்களுடன், சங்கக்காரவை முந்தி 4வது இடத்திற்கு சென்று விட்டார்.
51 சதங்களுடன் சச்சின் முதலிடத்திலும், 45 சதங்களுடன் ஜாக்ஸ் காலிஸ் 2வது இடத்திலும், 41 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் 3வது இடத்திலும் உள்ளனர்.
சொந்த மண்ணில் அதிக சதம்
மேலும், சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள்(9) எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் 9 ஜோ ரூட் சதங்கள் அடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர் பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்திற்கு சென்றுள்ளார். மொத்தமாக 39 சதங்கள் அடித்துள்ள அவர், அதில் 24 சதங்கள் இங்கிலாந்து மண்ணில் அடித்துள்ளார்.
காலிஸ், பாண்டிங், ஜெயவர்த்தனே ஆகியோர் சொந்த மண்ணில் 23 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |