சிறார்கள், பெண்கள் என உடல் கருகி பலியான பலர்... தீக்கிரையான அகதிகள் முகாம்
தென்னாப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் குடியிருப்பற்ற அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஐந்து மாடி பாழடைந்த கட்டிடம் ஒன்று தீ விபத்தில் சிக்கியதில் இதுவரை 74 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காயங்களுடன் தப்பிய 53 பேர்கள்
குறித்த சம்பவத்தில் 24 பெண்கள், 40 ஆண்கள், 12 சிறார்கள் உட்பட 74 பேர்கள்கள் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது. இதில் 10 பேர்களை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தமது 20 ஆண்டுகால சேவையில், இதுபோன்றதொரு சூழலை எதிர்கொண்டதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் 53 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
@getty
கட்டிடத்தின் உள்ளே 73 சடலங்கள்
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.19 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த 10 நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாக அவசரகால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும், 43 தீயணைப்பு வீரர்களும் உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். சுமார் 200 குடும்பங்கள் இந்த விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று தங்குமிடங்களை வழங்க நகர நிர்வாகம் மூன்று தளங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ap
73 சடலங்கள் கட்டிடத்தின் உள்ளே இருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் பல அடையாளம் தெரியாத உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
@getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |