கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.7 கோடியை இழந்த பிரபல நடிகர்

Johnny Depp Money
By Karthikraja May 30, 2026 01:36 PM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகர் கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.7 கோடியை இழந்துள்ளார்.

ரூ.7 கோடியை இழந்த ஜானி டெப்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரான ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்னும் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ்பெற்றார். 

கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.7 கோடியை இழந்த பிரபல நடிகர் | Johnny Depp Dupped Nearly 7 Cr In Credit Card Scam

ஜானி டெப் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கி, 5,20,000 பவுண்டுகள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.7கோடி) பணத்தை இழந்துள்ளார்.

டெப்பின் கணக்குடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனையை ஒரு அமெரிக்க வங்கி கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு வெளிவந்தது.

2024 ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. 

இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ள பிளாஸ்டிக் பணம் - என்ன காரணம்?

இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ள பிளாஸ்டிக் பணம் - என்ன காரணம்?

இந்தக் காலகட்டத்தில், டெப்பின் கிரெடிட் கார்டு மூலம், இணையவழி கொள்முதல்கள், தங்குமிட முன்பதிவுகள் மற்றும் இணையதளங்கள் மூலம் செய்யப்பட்ட பிற கொடுப்பனவுகள் உட்பட 308 தனித்தனி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, 5,20,000 பவுண்டுகளுக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. 

கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.7 கோடியை இழந்த பிரபல நடிகர் | Johnny Depp Dupped Nearly 7 Cr In Credit Card Scam

பிடிபடாமல் இருப்பதற்காக, வேண்டுமென்றே சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

மே 6 அன்று, டெப்பின் கணக்கிலிருந்து ஆங்கியால்ஃபோல்ட் பகுதியில் உள்ள ஒரு வாடகைக் குடியிருப்புக்கு அந்தப் பணம் சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கிருந்த பல்ஹேரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்பதிவுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹங்கேரிய தொலைபேசி எண், ஐபி முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் மூலம் அதிகாரிகள் அவரை அந்தப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.

அவருக்கு எப்படி டெப்பின் கிரெடிட் கார்டு தரவுகள் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தனது அட்டைத் தகவல்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை டெப் முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US