அமெரிக்கா இன்னொரு போரை விரும்பவில்லை..! ஜோர்டான் ட்ரோன் தாக்குதலால் அதிகரிக்கும் பதற்றம்
ஈரானுடனான இன்னொரு போரை நாங்கள் எதிர் நோக்கவில்லை என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல்
ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நடத்தப்பட்ட திடீர் ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வீரர்கள் தூங்கி கொண்டு இருந்த போது எந்தவொரு எச்சரிக்கையும் இன்றி இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.
Reuters
அதே சமயம், அமெரிக்க ட்ரோன்கள் திரும்பும் வேளையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் முடக்கப்பட்டு இருந்த நிலையில், அதே நேரத்தில் தாக்குதல் ட்ரோன்கள் உள்ளே புகுந்து உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக பணக்காரர் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடம்: ரூ.25,000 கோடியை 27 நாளில் இழந்த எலான் மஸ்க்
சிறிது நேரத்தில் பெண்டகன் வெளியிட்ட குறிப்பில், இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு கொண்ட கிளர்ச்சியாளர்கள் படை நடத்தி இருப்பதாக அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், குற்றச்சாட்டு ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது.
BBC
போர் செய்யும் திட்டமில்லை
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, நாங்கள் இன்னொரு போரை நாங்கள் நாடவில்லை, மேலும் பதற்றத்தை அதிகரிக்கவும் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்க வீரர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் நிச்சயமாக மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |