மோடிக்கு சாரதியாக மாறிய ஜோர்டான் மன்னர்: சர்வதேச கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவம்
இந்திய பிரதமர் மோடிக்கு ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிய சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஓமன், எத்தியோப்பியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Rare Diplomatic Gesture !!
— News Algebra (@NewsAlgebraIND) December 16, 2025
Crown Prince Al Hussein bin Abdullah II personally drives Indian PM Narendra Modi to the Jordan Museum 😍🔥 pic.twitter.com/KX2KbSbJvZ
இதன் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்ற நிலையில் அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கி அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார்.
மேலும் இந்திய பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டின் ராணுவ அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் நாட்டு மன்னர்
சுற்றுப்பயணத்தின் ஒருப்பகுதியாக ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் இருவரும் காரில் அருங்காட்சியகம் புறப்பட்டு சென்ற நிலையில், மோடி முன் இருக்கையில் அமர ஜோர்டான் மன்னர் அந்த காரை ஓட்டிச் சென்றார்.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |