சூறாவளி காற்றில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: வைரல் வீடியோ
பிரேசிலில் சுதந்திர தேவியின் சிலை சூறாவளி காற்றுக்கு சரிந்து விழுந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை
தெற்கு பிரேசிலில் அமைந்துள்ள ஹவன் என்ற வணிக வளாகத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த சுதந்திர தேவியின் 24 மீட்டர் உயர சிலையானது நேற்று வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் சரிந்து விழுந்து நொறுங்கியது.
🚨🇧🇷 Meanwhile in Brazil
— Concerned Citizen (@BGatesIsaPyscho) December 15, 2025
Strong Winds just toppled this replica statue of Liberty. pic.twitter.com/DVlU0IZRUp
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
சாலை வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் இடமான குவைபா நகரின் பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தின் போது உயிரிழப்புகளோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
சேதங்களை குறைத்த முன்னறிவிப்பு
சூறாவளி காற்று குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கி இருக்கும்படியும் எச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் சிலையை நிறுவவும், எதிர்காலத்தில் இது போன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |