உலகின் சிறந்த வீரராக இருந்தும்., வெளியேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது; ஜோஸ் பட்லர்
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று, சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து வெளியேறியது குறித்து ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்தார்.
இங்கிலாந்து வெளியேற்றம்
லாகூரில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
இங்கிலாந்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இஃப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) 146 பந்துகளில் 177 ஓட்டங்கள் விளாசினார்.
அதேபோல் வெற்றிக்காக போராடிய ஜோ ரூட் 120 (111) ஓட்டங்கள் குவித்தார். போட்டிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோஸ் பட்லர் (Jos Buttler),
"போட்டியில் இருந்து சீக்கிரமே வெளியேற்றப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. ஆட்டத்தில் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவற்றை நாங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. ரூட் நம்பமுடியாத ஒரு இன்னிங்சை விளையாடினார். அவருடன் இருக்க சிறந்த 6 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் எங்களுக்குத் தேவைப்பட்டார்.
கடைசி 10 ஓவர்கள் எங்களிடம் இருந்து கொஞ்சம் விலகிச் சென்றன. இஃப்ராஹிமிற்கு பாராட்டுகள் போய் சேரும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். கடைசி 10 ஓவர்களில் 113 ஓட்டங்கள் அந்த மைதானத்தில் மிகச் சிறந்த ஸ்கோரை எட்ட வைத்தது.
ஒருவேளை நான் இப்படி விளையாட மாட்டேன் என்று எனக்கு தெரிந்திருந்தால், உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தும் சிறப்பாக செயல்படாதபோது அது ஏமாற்றமளிக்கிறது. உணர்ச்சிவசப்பட்ட எந்த முடிவுகளையும் எடுக்க விரும்பவில்லை" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |