வீட்டை 45 விஷப்பாம்புகள், உடும்புகளுடன் பகிர்ந்து கொண்டு வாழும் இளைஞன்! வியக்கவைக்கும் பின்னணி
Nicaragua நாட்டில் ஊர்வன செல்லப்பிராணிகள் மீது காதல் கொண்டுள்ள இளைஞர் தனது வீட்டில் கொடிய விஷம் கொண்ட 45 பாம்புகள் உள்ளிட்ட பல ஊர்வனங்களுடன் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jose Alberto Deladillo என்ற 27 வயதான இளைஞர் பாம்புகள், உடும்புகள் போன்ற ஊர்வன செல்லப்பிராணிகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஆவார்.
அவர் வீட்டில் 45 பாம்புகள், 12 ஆமைகள், 6 உடும்புகள் போன்றவைகள் உள்ளன. ஊர்வன செல்லப்பிராணிகளை வைத்து ஒரு pet store-ஐ நாட்டின் தலைநகர் Matagalpaல் அமைக்க வேண்டும் என்பதே Joseன் கனவாக உள்ளது.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்வனங்களை வளர்க்க தொடங்கியதாக Jose கூறுகிறார்.
முதன் முதலாக ஒரு உடும்பை தான் வீட்டில் வளர்க்க தொடங்கினார். பின்னர் தான் அவர் பாம்புகளை வீட்டில் பரமாரிக்க தொடங்கியிருக்கிறார்.
இது போன்ற ஊர்வனங்களை நாம் தொந்தரவு செய்தால் தான் அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என Jose கூறியுள்ளார்.