மாதம்தோறும் 6 லட்சம்.., கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய மனைவிக்கு நீதிபதி கொடுத்த அதிர்ச்சி
மாதம்தோறும் 6 லட்சம் கேட்டு மனைவி ஒருவர் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய வழக்கில் நீதிபதி சில விடயங்களை பேசியுள்ளார்.
ஜீவனாம்சம் கோரி மனு
இந்திய தலைநகர் டெல்லியை சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் தீபிகா நாராயண் பரத்வாஜ் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு தொடர்பான காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், விவாகரத்து பெற்ற மனைவி ஒருவர் தன்னுடைய கணவரிடம் ஜீவனாம்சம் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தன்னுடைய முழங்கால் வலி சிகிச்சைக்கு ரூ.4 முதல் 5 லட்சம், ஆடைகள் வாங்குவதற்கு ரூ.15,000, வீட்டின் உணவு செலவுக்கு ரூ.60,000, வெளியில் சாப்பிட ரூ.20,000 என்று ரூ.6 லட்சத்து 16,000 -யை கணவர் மாதம் தோறும் வழங்க வேண்டும்" என்று மனைவி கூறியிருந்தார்.
இந்த மனுவை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி லலிதா.கே, பெண்ணின் வழக்கறிஞரை பார்த்து அறிவுரை வழங்கியுள்ளார்.
நீதிபதி கூறுகையில், "இது என்ன இவ்வளவு பெரிய பட்டியல்? ஒரு மாதத்துக்கு ஒருவரின் செலவுக்கு ரூ.6 லட்சத்து 16,000 தேவைப்படுமா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு தேவையா?
அவருக்கு இவ்வளவு பணம் வேண்டுமென்றால் வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்லுங்கள். இவ்வளவு பணத்தை கணவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே ஜீவனாம்சம் வழங்க கோர முடியும். அளவுக்கதிகமான பணம் கேட்டால் மனுவை நிச்சயம் நிராகரித்து விடுவேன். நீதிமன்ற நடைமுறைகள் மனுதாரருக்கு புரியாது.
அவரை உண்மையான செலவு விவரத்தை தாக்கல் செய்ய சொல்லுங்கள்" என்று வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |