ஐஸ்வர்யா ராய், தீபிகா இல்லை.,இந்தியாவின் பணக்கார நடிகை இவர்தான்! மொத்தம் 4,600 கோடி சொத்து
பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா இந்தியாவின் பணக்கார நடிகையாக எப்படியானார் என்பது குறித்து இங்கு காண்போம்.
ஜூஹி சாவ்லா
1990களில் இந்தி திரையுலகை கலக்கியவர் நடிகை ஜூஹி சாவ்லா. ஆனால் இவர் கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிப்படமே கொடுக்கவில்லை.
என்றாலும் இவர் ரூ.4,600 கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார நடிகையாக வலம் வருகிறார்.
1984ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஜூஹூ சாவ்லா, 1986யில் வெளியான சுல்தானத் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
முன்னணி கதாநாயகியாக
அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், 2010ஆம் ஆண்டிற்கு பிறகு குணச்சித்திர நடிகையாக மாறினார்.
நடிப்பதைத் தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ததன் மூலம் இவர் பல கோடி வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
நடிகர் ஷாரூக் கானின் 'ரெட் சில்லீஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் இணைப் பங்குதாரராக ஜூஹி சாவ்லா உள்ளார்.
மேலும், ஐபிஎல்லில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.620 கோடி வரை இவர் முதலீடு செய்துள்ளாராம்.
ரூ.4,600 கோடி
இந்த அணியின் மதிப்பு ரூ.9,150 கோடி ஆகும்.
இதுபோன்று பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வெற்றி கண்டதன் வாயிலாக, ஜூஹி சாவ்லா ரூ.4,600 கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார்.
இதன்மூலம் the Huran India Rich பட்டியலில் (2024) முதலிடம் பிடித்துள்ளார். அவர் அடுத்த இடங்களில் ரூ.850 கோடி சொத்து மதிப்புடன் ஐஸ்வர்யா ராயும், ரூ.650 கோடி சொத்து மதிப்புடன் பிரியங்கா சோப்ராவும் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் ஆலியா பட், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் இருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |