இத்தாலியில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
சுவிஸில் ஆல்ப்ஸ் மலையில் உச்சிக்கு சென்ற கேபிள் கார் திடீரென பழுதடைந்ததால் அதில் சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வெயிலின் தாக்கத்தால் தலைநகர் ரோமில் தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
உக்ரைன் தான் வழங்கிய கொத்துக்குண்டுகளை பயன்படுத்துகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்மைய சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாத சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்ட வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57) தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |