32 நோய்களை உண்டாக்கும் Junk Foods., எச்சரிக்கும் மருத்துவ ஆய்வறிக்கை
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods) தொடர்ந்து உட்கொள்வதால் புற்றுநோய், இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் மற்றும் 32 நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
மேலும், இது மனநோய் மற்றும் அகால மரணத்தின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இந்த ஆய்வில் பங்கேற்ற அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் அல்ட்ரா பதப்படுத்தப்பட்ட உணவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த ultra-processed உணவை உட்கொள்வது இதய நோயால் இறக்கும் அபாயத்தை 50 சதவீதம் அதிகரிக்கிறது என்று சான்றுகள் காட்டுகின்றன.
இந்த ஆய்வில், கோடிக்கணக்கான மக்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.
தீவிர பதப்படுத்தப்பட்ட உணவின் காரணமாக மனச்சோர்வுக்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகரித்துள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பொது சுகாதாரத்தை பாதுகாக்க அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தினர்.
இதுபோன்ற ultra-processed உணவின் பொட்டலங்களில் அதிக அளவு சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன என்று அச்சிடுதல், பள்ளிகள் மற்றும் கிளினிக்குகளுக்கு அருகில் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை விளம்பரப்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடை செய்தாழ் பொன்னர் ணடவடிக்கைகளில் மேற்கொள்ளவேண்டும் என விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட பதப்படுத்தப்படாத அல்லது குறைவான பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் பரிந்துரைகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
JunkFoods Health Problems, ultra-processed foods, Junk Foods health issues