முதல் இரட்டை சதம்! வரலாற்றில் இடம்பிடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர்
மேற்கிந்திய தீவுகளின் ஜஸ்டின் கிரேவ்ஸ் இரட்டைசதம் அடித்து சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார்.
ஜஸ்டின் கிரேவ்ஸ்
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜஸ்டின் கிரேவ்ஸ் (மேற்கிந்திய தீவுகள்) 202 ஓட்டங்கள் குவித்தார். 
இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும். அவரது அபார ஆட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி கடினமான போட்டியை டிரா செய்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்திற்கு எதிராக இரட்டை சதம் அடித்த 4வது மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரேவ்ஸ் (Justin Greaves) ஆவார்.
கிறிஸ் கெய்ல்
1969யில் செய்மௌர் நர்ஸ் 258 ஓட்டங்கள் விளாசியிருந்தார். அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு டெர்ரன் பிராவோ 218 ஓட்டங்கள் குவித்தார்.
கார்டன் கிரீனிட்ஜ் 1987யில் 213 ஓட்டங்கள் குவித்த நிலையில், கிரேவ்ஸ் தற்போது 202 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் தனிநபர் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் (Chris Gayle) 2008யில் 197 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |