ஒடிசா ரயில் விபத்தின் படங்கள் இதயத்தை உடைக்கிறது! கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஒடிசா ரயில் விபத்து தொடர்பான படங்கள் மற்றும் அறிக்கைகள் தனது இதயத்தை உடைப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கோர விபத்து
இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து குறித்து அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
Dibyangshu Sarkar/AFP
PTI
ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல்
இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒடிசா விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'இந்தியாவின் ஒடிசாவின் ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்கள் இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்களை என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில், இந்திய மக்களுடன் கனேடியர்கள் நிற்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
The images and reports of the train crash in Odisha, India break my heart. I’m sending my deepest condolences to those who lost loved ones, and I’m keeping the injured in my thoughts. At this difficult time, Canadians are standing with the people of India.
— Justin Trudeau (@JustinTrudeau) June 3, 2023
Chris J Ratcliffe/Getty Images