படகில் கேட்டி பெர்ரியை முத்தமிட்ட ஜஸ்டின் ரூட்டோ: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஜஸ்டின் ரூட்டோ மற்றும் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரூட்டோ-கேட்டி பெர்ரி வைரல் புகைப்படம்
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ(53) மற்றும் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி(40) டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் ஜஸ்டின் ரூட்டோ மற்றும் பாப் பாடகி கேட்டி பெர்ரி இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CALIFORNIA GIRLS WE'RE UNFORGETTABLE ❤️🔥 pic.twitter.com/lf46GFaBRL
— Katy Perry Daily Brasil (@katydailybrasil) October 11, 2025
இருவரும் கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில், படகு ஒன்றில் கட்டியணைத்தபடி முத்தமிட்டு கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
வீடியோவில் இருப்பது ரூட்டோவும், கேட்டி பெர்ரி-யும் தான் என இந்த காட்சிகளை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்திய பிறகு இந்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இருவரும் ஜூலை 28ம் திகதி மாண்ட்ரீலில் உள்ள உணவகம் ஒன்றில் இரவு உணவில் சந்தித்து கொண்ட போது வெளியான புகைப்படங்களுக்கு பிறகு, இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளிவர தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |