காபூலுக்குள் நுழைந்த தாலீபான்களை கட்டியணைக்கும் மக்கள்? ஜனாதிபதிக்கு மரணகோஷம்: கமெராவில் பதிவான காட்சி
ஆப்கானிதனின் மிக முக்கிய நகரமான காபூலை தாலீபான்கள் கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்கா மற்றும் சில வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாகவே தாலீபான்கள் அங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அதன் படி நாட்டின் மிக முக்கிய நகரமான, வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கும் காபூலை இன்று தாலீபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
#Taliban
— Sarguntaleb (@sarguntaleb) August 15, 2021
In der Stadt Kabul.
Eigentlich braucht man nichts dazu sagen .
Aber für die Dummies da draußen, das Volk heißt die Talibanen willkommen.
Sie freuen sich. pic.twitter.com/oiqfSx0cZ9
இதையடுத்து நாட்டின் ஜனாதிபதி AshrafGhani பதவி விலகிவிட்டதாகவும், 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
தாலீபான் காபூலுக்குள் நுழைந்ததால், அங்கிருக்கும் ஏராளமான மக்கள் தலைநகரை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது அந்நாட்டு சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Western media is not showing this #Taliban #Kabul https://t.co/w2nNLl73xn
— Sufyan Abdul Rahman (@SufyanARahman) August 15, 2021
அதில், காபூலுக்குள் நுழைந்த தாலீபான்களை அங்கிருக்கும் மக்கள் சிலர் அவரணைக்கின்றனர். அப்போது ஜனாதிபதியான AshrafGhani-வுக்கு எதிராக மரணகோஷம் ஈடுகின்றனர்.
இன்னும் சில நாட்களில் ஆப்கானிஸ்தான் தாலீபான்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அங்கிருக்கும் தங்கள் நாட்டு தூதர்களை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள், தங்கள் நாட்டு துருப்புகளை அனுப்பி காப்பாற்றி வருகின்றன.
இந்நிலையில், சற்று முன் காபூல் நகரில் தாலீபான்கள் நுழைந்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. இதையடுத்து தற்போது தாலீபான்களிடம் மீண்டும் ஆட்சி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.