பாகிஸ்தானை எதிர்த்து.. ஆப்கானில் வெடிக்கும் போராட்டம்! மக்கள் மீது தாலிபான் சரமாரி துப்பாக்கி சூடு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானை எதிர்த்து நுற்றுக்கணக்கான ஆப்கன் மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் வசம் சென்றுள்ளதால் அந்நாட்டில் புதிய ஆட்சி அமைக்க மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தாலிபான்களுக்கு உலக நாடுகள் யாரும் ஆதரவு தராத நிலையில் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி பைஸ் அமீது தாலிபான்களின் முக்கிய தலைவரை சந்தித்து பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நுற்றுக்கணக்கான ஆப்கான் மக்கள் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் பைஸ் அமீது காபூலில் தங்கியுள்ள செரீனா ஓட்டல் முன்பாக ஆப்கான் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெரும்பாலும் வீட்டில் முடங்கி கிடந்த பெண்களே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தாலிபான்களுக்கு எதிராக மக்கள் எடுத்த முதல் முயற்சியாக உலக நாடுகள் பார்க்கிறது.
போராட்டத்தின் போது பாகிஸ்தான் ஒழிக என்றும் பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஒழிக என்றும் கோஷம் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் எங்களுக்கு விடுதலை வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
Video: Hundreds of protesters demonstrated in front of Pakistan's embassy in Kabul on Monday. They dispersed after Taliban forces fired into the air.#TOLOnews pic.twitter.com/qV2QaNgOme
— TOLOnews (@TOLOnews) September 7, 2021
கூட்டத்தை கலைக்க தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மக்களை விரட்டி அடித்தனர். சில பொதுமக்களையும் தாலிபான்கள் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தாலிபான்களின் இடைக்கால அரசின் பிரதமராக தலிபான் மூத்த தலைவர்களில் ஒருவரான முல்லா முகமது ஹசன் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.