என்னுடைய முதல் கவலை இதுதான்! என் மனைவிக்கும் வீட்டு பெண்களுக்கும்... காபூலின் தற்போதைய நிலையை வேதனையுடன் விளக்கிய உள்ளூர்வாசி
தாலிபான்கள் கட்டுபாட்டுக்குள் வந்துள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது வசிக்கும் மக்கள் அங்கும் நிலவும் சூழல் குறித்து பேசியுள்ளனர்.
காபூலை வெறும் 5 மணிநேரத்தில் கைப்பற்றியது தாலிபான்கள் அமைப்பு. மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறுகிறேன் எனக் கூறிவிட்டு மக்களை நிர்கதியாய் விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார் அதிபர் அஷ்ரப் கானி.
சரி தற்போது காபூலின் நிலை என்ன? அங்கு வசிக்கும் பொதுமக்கள் சிலர் அது குறித்து பேசியுள்ளனர். காபூலை சேர்ந்த குடியிருப்புவாசிகள் பேசுகையில், மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். எப்போது பரபரப்பாக காட்சியளிக்கும் காபூல் வீதிகள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அரசு அலுவலங்கள் மூடப்பட்டுள்ளது. அங்கு யாரும் இல்லை.
காபூலின் அனைத்து இடங்களும் அப்படித்தான் காட்சியளிக்கின்றன.இங்கிருந்த அதிகாரிகள், மக்கள் எல்லோரும் ஒன்று வெளிநாடுகளில் தப்பிச்சென்றிருக்க வேண்டும். இல்லையென்றால் விமான நிலையத்தில் விமானங்களுக்காக காத்திருக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் வழக்கமாக இருக்கும் காவலர்களை காணவில்லை. வாகனஓட்டிகளை சோதனை சாவடிகளில் உள்ள தடைகளை தாங்களே தூக்கிவிட்டு தங்களது வாகனங்களை எடுத்துச்செல்கின்றனர் என கூறினார்கள்.
உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், எனக்கு இங்க ஒரு கடை இருக்கு. நான் இங்க ப்ரெட் விற்றுக்கொண்டு இருந்தேன். அதன்மூலம் கொஞ்சம் பணம் சம்பாதித்துகொண்டிருந்தேன்.
பாதுகாப்பு அதிகாரிகள் எல்லாம் என்னுடைய நண்பர்கள்தான். அவர்கள் இப்போது இங்கு இல்லை. என்னுடைய முதல் கவலை எனக்கு இப்போ தாடி வளரனும். கொஞ்ச நாள்களிலே தாடி எப்படி வேகமா வளரும். நான் போய் என் மனைவிக்கும் என் வீட்டு பெண்களுக்கும் போதுமான புர்கா இருக்கான்னு பார்க்கனும் என வேதனையோடு பேசியுள்ளார்