நாவூறும் சுவையில் கடலை மிட்டாய்.., இலகுவாக செய்வது எப்படி?
கடலைமிட்டாய் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு தின்பண்டம் ஆகும்.
கடலைமிட்டாயில் நிறைய ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்தான கடலை மிட்டாய் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- நெய்- 1 ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வைத்து மொறுமொறு வென்று வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு ஆறவைத்து தோலை நீக்கி வேர்க்கடலையை பாதியாக உடைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வெல்லப்பாகை வடிகட்டி மீண்டும் மிதமான தீயில் சூடுபடுத்தி கெட்டியாக எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து வெல்லப்பாகில் நெய், ஏலக்காய் தூள் மற்றும் வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.
பின்னர் உடனே ஒரு தட்டில் மாற்றி சமன் செய்து 5 நிமிடம் கழித்து துண்டுதுண்டாக வெட்டினால் சுவையான கடலைமிட்டாய் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |