கொடிகளை பறக்கவிட்ட ஆக்கிரமிப்பாளர்கள்: உக்ரைனின் மூலோபாய நகரை கைப்பற்றிய ரஷ்யா
கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியில் உள்ள லிசிசான்ஸ்க் நகரம் ரஷ்ய படைகளால் முழுவதுமாக கைப்பற்றப்பட்டதாக செச்சென் குடியரசுத் தலைவர் ரம்ஜான் கதிரோவ் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் உக்ரைனின் கிழக்கு பகுதியான லுகான்ஸ்கில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய மூலோபாய நகரான லிசிசான்ஸ்க்கை ரஷ்ய ராணுவம் முழுவதுமாக கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக ரஷ்யாவின் ஆதரவாளரான செச்சென் நாட்டின் குடியரசுத் தலைவர் ரம்ஜான் கதிரோவ் அவரது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தில், உக்ரேனிய அரசியல்வாதிகள், முக்கிய ஊடகவியலாளர்கள், இராணுவ வல்லுநர்களின் உரத்த அறிக்கைகள் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகள் ரஷ்ய படைகளின் நடவடிக்கையை தொடர்ந்து நொடி பொழுதில் சரிந்துவிட்டன எனத் தெரிவித்தார்.
#Лисичанск Луганская обл., противник в городе https://t.co/fj8c5VanL4 pic.twitter.com/qwnD5ZecTt
— Necro Mancer (@666_mancer) July 2, 2022
அத்துடன் லிசிசான்ஸ்க் நகரம் தற்பொது முழு சுதந்திரம் அடைந்துவிட்டது.
மேலும் கியேவ் ஆட்சியின் நீண்டகால அடக்குமுறையிலிருந்து விடுபட்டடுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய நகரில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த ஷெல் தாக்குதல்: பரபரப்பு வீடியோ காட்சிகள்
லிசியான்ஸ்க் நகரின் தெருக்களில் செச்சென் படைகளின் கான்வாய் முன்னேறிவருவதாக முன்னதாகவே தெரிவித்து இருந்த கதிரோவ், இப்போது எங்கள் பதாகைகள் உக்ரைன் தெருக்களையும் நகரத்தின் பிரதான சதுக்கத்தையும் அலங்கரிக்கின்றன, ஏனெனில் அவை ரஷ்யாவின் சுதந்திரம் வலிமை மற்றும் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன எனத் தெரிவித்துள்ளார்.