பிலிப்பைன்ஸை சூறையாடிய கல்மேகி சூறாவளி: மீட்பு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து
கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கல்மேகி புயல்
பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி சூறாவளி தாக்கியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிட்டத்தட்ட 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதுடன், பல கார்கள் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

தீவிரமான மழைப் பொழிவு காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மேலும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கல்மேகி சூறாவளியானது வியட்நாமின் மத்திய பகுதிகளில் நாளை இரவு கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வியட்நாம் அரசு முன்னெடுக்க தொடங்கியுள்ளது.
விமான சேவைகள் ரத்து

கல்மேகி புயல் காரணமாக 180க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசமான காலக்கட்டத்தில் வெள்ள மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |