எத்தனை தடைகள் வந்தாலும் அதை முறியடிப்போம்! ஜல்லிக்கட்டு குறித்து கமல்ஹாசன் கருத்து
ஜல்லிக்கட்டு கொடூரச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதைக் குறிப்பிட்டு கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்படி நடக்கின்றன என்பது தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.
அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த நிலையில் தமிழக அரசு, இம்முறை கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறியுள்ளது.
கமல்ஹாசனின் ட்வீட்
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது பதிவில், 'ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும், கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்' என தெரிவித்துள்ளார்.
ஏறு தழுவுதல் நம் அடையாளம். இயற்கையோடும் கால்நடைகளோடும் இரண்டறக் கலந்து வாழும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சி. ஜல்லிக்கட்டு ஒரு ரத்த விளையாட்டோ, கொடூரச் செயலோ அல்ல என்று உச்சநீதி மன்றம் குறிப்பிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. எத்தனைத் தடைகள் வந்தாலும் வீரத்துடன் அதை முறியடிப்போம்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 13, 2022