வெள்ளை மாளிகைக்கு திரும்ப தயாராகும் டிரம்ப்! இரவு உரையை ரத்து செய்த கமலா ஹாரிஸ்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் முன்னிலை பெற்று வரும் நிலையில், கமலா ஹாரிஸ் தன்னுடைய இரவு உரையை ரத்து செய்துள்ளார்.
வெற்றிக்கு மிக அருகில் டொனால்ட் டிரம்ப்
47 வது அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் அமெரிக்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு மிக அருகில் முன்னிலை பெற்று வருகிறார்.
270 இடங்கள் பெற்றால் பெரும்பான்மை என்ற நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 266 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை பெற்று வருகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 194 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்று வருகிறார்.
இரவு உரையை ரத்து செய்த கமலா ஹாரிஸ்
அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு மிக அருகில் முன்னிலை பெற்று வரும் நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் தன்னுடைய இரவு உரையை ரத்து செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கமலா ஹாரிஸின் பிரச்சார துணைத் தலைவர் செட்ரிக் ரிச்மண்ட்(Cedric Richmond) வாஷிங்டனில் வழங்கிய தகவலில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் இரவு உரையை இன்று நீங்கள் கேட்க மாட்டீர்கள், ஆனால் நாளை அவரது உரையை நீங்கள் கேட்கலாம் என்று தெரிவித்தார்.
குடியரசு கட்சி 4 ஆண்டுகளுக்கு பிறகு செனட்டின் கட்டுப்பாட்டையும் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |