ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால் உலக நாடுகளுக்கு அதிருப்தி! அதுகுறித்து தமிழ்வம்சாவளி பெண் கமலா ஹாரீஸ் விளக்கம்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது குறித்து தமிழ் வம்சாவளி பெண்ணான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் விளக்கமளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முன்னதாக வெளியேறின. இதற்கு பல்வேறு நாட்டு அரசுகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னதாக ஒரு வாரம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து ஆசிய நாடுகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க கமலா இந்த ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கிறது. ஆகவே எங்களது நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாக தெரியும்.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசிய நாடுகளை ஆப்கன் வெளியேற்றம் பாதிக்காவண்ணம் அமெரிக்கா பாதுகாக்கும் என உறுதி அளித்துள்ளார்.