மீண்டும் டெஸ்டில் களமிறங்கி மகத்தான சாதனை படைத்த கேன் வில்லியம்சன்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் சாதனை அரைசதம் விளாசினார்.
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடந்து வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்ய, நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடி வருகிறது.
ரோச் ஓவரில் கான்வே டக்அவுட் ஆகி வெளியேற, கேன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார்.
பொறுமையாக ஓட்டங்களை சேர்த்த அவர், டெஸ்டில் தனது 38வது அரைசதத்தை பதிவு செய்தார்.
சாதனை
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றார்.
மேலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்டில் அதிக அரைசதங்கள் (8) அடித்த நாதன் ஆஸ்லேயின் சாதனையை கேன் வில்லியம்சன் (Kane Williamson) சமன் செய்தார்.
2025ஆம் ஆண்டில் முதல் டெஸ்டில் விளையாடிய வில்லியம்சன், 102 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |