இதயம் நொறுங்கிய ஜாம்பவானின் ரசிகர்கள்: காயத்திலிருந்து மீண்டு வந்து தவறிய சதம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் கேன் வில்லியம்சன் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
முதல் டெஸ்ட்
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது.
காயத்தில் இருந்து மீண்டு வந்த கேன் வில்லியம்சன் சிறிய இடைவெளிக்கு பின் இப்போட்டியில் களமிறங்கினார். டெவோன் கான்வே 2 ஓட்டங்களில் அட்கின்சன் ஓவரில் ஆட்டமிழந்தார்.
கேன் வில்லியம்சன்
பின்னர் வந்த கேன் வில்லியம்சன் (Kane Williamson) அணித்தலைவர் டாம் லாதம் உடன் கைகோர்த்தார். இந்தக் கூட்டணி 58 ஓட்டங்கள் சேர்க்க, லாதம் 47 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா தனது பங்குக்கு 34 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் நங்கூரம்போல் நின்று ஆடிய வில்லியம்சன் தனது 36வது அரைசதத்தினை பதிவு செய்தார்.
அணியின் ஸ்கோர் 227 ஆக உயர்ந்தபோது கேன் வில்லியம்சன் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 7 ஓட்டங்களில் அவர் சதத்தினை தவறவிட்டது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 319 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 41 ஓட்டங்களுடனும், டிம் சௌதீ 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் தரப்பில் சோயிப் பஷீர் 4 விக்கெட்டுகளும், கஸ் அட்கின்சன் மற்றும் ப்ரைடோன் கர்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |