கல்லூரி விடுதிகளில் கஞ்சா புழக்கம்: 500 பொலிஸார் குவிப்பு, 30 மாணவர்கள் அதிரடியாக கைது
தனியார் கல்லூரியை சுற்றிள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல் வந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் சோதனையில் இறங்கியுள்ளனர்.
கஞ்சா புழக்கம்
தமிழக மாவட்டமான செங்கல்பட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றி இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 3 மணிக்கே 500-க்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குவிந்து அதிர்ச்சியாக சோதனை நடத்தினர்.
முக்கியமாக, கல்லூரிக்குச் சொந்தமான ஆண்கள், பெண்கள் விடுதி, கல்லூரியைச் சுற்றியுள்ள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இந்த கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகளில் பொலிஸ் குவிக்கப்பட்டதால் காலையிலேயே அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |