பிரபல இளம் நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகினர்
34 வயதே ஆன இளம் கன்னட நடிகரின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட நடிகர் சந்தோஷ் பாலராஜ் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை காலமானார்.
கடந்த சில வாரங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
2022-ஆம் ஆண்டு சாலை விபத்தில் தந்தை இறந்த பிறகு, சந்தோஷ் பாலராஜ் திருமணம் செய்துகொள்ளாமல் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
அவரது தந்தை அனேகல் பாலராஜ் திரைப்பட தயாரிப்பாளராவார். இதன்மூலம், அனேகல் சந்தோஷை 2009-ஆம் ஆண்டு கெம்பா எனும் படத்தின் மூலம் முன்னணி கதாப்பாத்திரத்தில் திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார்.
இதையடுத்து, கணபா, ஒலவினா ஓலே, ஜன்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
2017-ஆம் ஆண்டு கரியா-2 படத்தின் மூலம் சந்தோஷ் மேலும் அங்கீகாரத்தைப் பெற்றார். இதுவே அவரது கடைசி படமாகவும் இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Santhosh Balaraj death, Kannada actor passes away, Santhosh Balaraj jaundice, Actor Santhosh Balaraj news, Santhosh Balaraj latest news, Kannada celebrity death 2025, Santhosh Balaraj obituary, Tollywood actor death news, Young Kannada actor dies, Santhosh Balaraj cause of death