உலகின் மிகப் பெரிய வலி! காபூல் விமானநிலையத்தில் பெற்றோர் கண்முன் உயிரிழந்த குழந்தை: கண்கலங்க வைக்கும் வீடியோ
காபூல் விமானநிலையத்தில் பெற்றோர் கண்முன்னே குழந்தை உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வந்தவுடன், அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்காக அவர்கள் நாள் கணக்கில் காபூல் விமானநிலையத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
அப்படி தங்களால் உள்ளே செல்ல முடியவில்லை என்றால் தங்கள் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என்று அங்கிருக்கும் பாதுகாப்பு இராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கும் வீடியோ காட்சி வெளியானது.
The biggest pain in the world... When parents watch their children die in front of them...?
— Kʌɭpɘsʜ Tʜʌĸoʀ ?? (@Kalpesh53046670) August 21, 2021
My heart is broken after watching this video ??#KabulAiport pic.twitter.com/0ZuP262zJp
இந்நிலையில், தற்போது காபூல் விமானநிலையத்தில் நடந்த துயர காட்சியின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், விமானநிலையத்தின் உள்ளே மக்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று பெற்றோர் வைத்திருந்த ஒரு குழந்தை பேச்சு மூச்சின்றி உயிரிழக்கிறார்.
இதைக் கண்ட பெற்றோர் அவரைக் காப்பாற்ற துடிக்கின்றனர். ஆனால், சிறுமியிடம் எந்த ஒரு உடல் அசைவும் தென்படவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் உலகிலே மிகப் பெரிய வலி இது தான் என்று வேதனையுடன் குறிப்பிட்டு வருகின்றனர்.