பிரபல நடிகர் கராத்தே ஹுசைனி மரணம்: கனவுகளைக் கலைத்த இரத்தப்புற்றுநோய்
பிரபல நடிகரும் வில் வித்தை பயிற்சியாளருமான கராத்தே ஹுசைனி காலமானார். அவருக்கு வயது 60.
பிரபல நடிகர் கராத்தே ஹுசைனி மரணம்
கராத்தே மாஸ்டரான ஷுஹான் ஹுசைனி, புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயக்குநர் கே. பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்ததுடன், வில் வித்தை பயிற்சியாளராக ஏராளமானோருக்கு பயிற்சி அளித்துள்ளார் ஹுசைனி.
ஹுசைனிக்கு சமீபத்தில் இரத்தப்புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டு 22 நாட்களில் மரணமடைந்துவிட்டார் அவர். அவருக்கு வயது 60.
ஹுசைனிக்கு உலக சுற்றுலா செல்லும் ஆசை இருந்தது. சுற்றுலாவுக்கு தயாராகிவந்தபோதுதான் அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
தனது சுற்றுலா ஆசை நிறைவேறாமலே மரணமடைந்தாலும், தனது உடலை தானம் செய்வது முதல் பல ஆசைகளை அவர் தெரிவித்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |