இந்தியாவில் பரவத்தொடங்கும் டெங்கு காய்ச்சல்: 10,000 பேருக்கு பாதிப்பு என தகவல்
இந்தியாவில் கர்நாடகத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு
நுளம்புகள் மூலம் பரவும் நோயில் டெங்கு நோய் தீவிரமானதாகும். இதனால் பல நோயாளர்கள் உயிரிழந்த சோகமும் உண்டு.
கர்நாடகத்தில் நாளுக்கு நாள் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், நேற்றைய தினம் மாத்திரம் 2 ஆயிரத்து 731 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 524 பேருக்கு உறுதி செய்யப்பட்டதுள்ளது. அதையடுத்து டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் டெங்கு காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பெங்களூருவில் மட்டும் ஒரே நாளில் 270 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |