கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை இழக்கிறதா பாஜக?
கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலையில் இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல்
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதா கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக, கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
தேர்தல் முடிவு
தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன, பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
@bt
பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் 118 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. பாஜக 73 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜக கடந்த முறை 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 77 இடங்களில் மட்டுமே உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
@ndtv
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 116 இடங்களில் முன்னிலையில் உள்ளதால், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக பாஜக ஆட்சியை இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்வதால், முடிவுகள் இன்னும் சரியாக கணிக்கப்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.