முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம்: கர்நாடக அரசு
முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பாடகி எஸ்.ஜானகி காலமானார்
இந்திய திரையுலகில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி எஸ்.ஜானகி தன்னுடைய 88வது வயதில் நேற்று காலமானார்.
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா, கான கோகிலா மற்றும் இசை அரசி என்று புகழப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

முழு அரசு மரியாதை
பாடகி எஸ்.ஜானகியின் உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு அவரது பூத உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
பாடகி ஜானகியின் மறைவுக்கு பொதுமக்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |