விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்! நடப்பது என்ன?
கர்நாடகாவில் குந்தப்பூர் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டாலும் தனியறையில் அமரவைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குந்தப்பூர் அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாததால் பெரும் சர்ச்சையை எழுந்தது.
ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதால், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பலரும் ஹிஜாப் அணியத் தொடங்கிய நிலையில், இஸ்லாமிய பெண்கள் அல்லாதவர்கள் காவித்துண்டுகளை அணிந்து வந்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த விவகாரம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், மதக்கலவரத்தை தூண்டும் செயல் என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இன்று ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உள்ளே அனுமதித்த Junior PU college நிர்வாகம் தனி அறையில் அமர வைத்தது.
அவர்களுக்கு எந்தவொரு பாடமும் எடுக்காமல் இருந்தால் பதற்றம் மேலும் அதிகரித்தது, ஹிஜாப்பை அகற்றினால் மட்டுமே வகுப்பறைக்கு செல்ல முடியும் எனவும் நிர்வாகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.